தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 11 November 2017

பசுக்கறியா - மாட்டுக்கறியா?


கடந்த 30 ஆம் தேதி காலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், நானும், பாஜகவைச் சேர்ந்த திரு நாராயணனும் கலந்துகொண்டோம். அப்போது அவர் ஒரு அறைகூவலை முன்வைத்தார். மாட்டுக்கறித் திருவிழா நடத்தும்  யாராவது துணிவிருந்தால் பசுக்கறித் திருவிழா நடத்துங்கள் பார்ப்போம் என்றார். அதற்கு நான் சரியான விடையை அங்கு சொல்லாமல் விட்டுவிட்டேன். அது  என் பிழையே


மறுநாள் தோழர் நலங்கிள்ளி தொலைபேசியில் அழைத்து, இறைச்சிக்காக மாடு வெட்டுதல் குறித்து, அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இருப்பதாகச் சொன்னது சரிதான். ஆனால் அதனை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லியிருக்கலாமே என்றார். பிறகு அவரே அதனை விளக்கவும் செய்தார்.

வழிகாட்டு நெறிமுறைகள்  48 ஆவது பிரிவில் அது உள்ளது. அதனை அப்படியே கீழே தருகின்றேன்

""The state shall endeavor to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds and prohibiting the slaughter of cows and calves and other milch and draught cattle" 

இதில் எங்கும் பசு புனிதம் என்பது போன்ற மதச் சார்புடைய சொற்கள் ஏதும் இல்லை. அது மட்டுமின்றி, இந்நெறிமுறை பசுக்களுக்கு மட்டுமே சொல்லப்படவில்லை. "MILCH' என்ற சொல்லை நாம் கவனிக்க வேண்டும். அதற்குக் "கறவைப் பசு" என்றே பொருள். "பால் தருவன" என்னும் பொருளும் சொல்லப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் ஆடு, ஒட்டகம் எல்லாம் அடங்கும்.

பசு என்று மட்டுமே பொருள் கொண்டாலும், அது  கறவைப் பசுவை மட்டுமே குறிக்கும். மடி வற்றிப்போன பசுக்களைக் குறிக்காது. அவற்றை என்ன செய்வது? எனவே உழவுக்கு உதவாத காளைகளையும், கறவை வற்றிப் போன பசுக்களையும் இறைச்சிக்காக வெட்டுவதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. மேலும் வழிகாட்டு நெறிமுறை என்பது பரிந்துரைதானே தவிர, சட்டம் இல்லை.  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டின் வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், எல்லோர்க்கும் கல்வி என்பன போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதமும், மதம் சார்ந்த அரசியலும் மட்டுமே பாஜாகவால் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் போக்கு, நாட்டை அழிவுப்பாதையை நோக்கியே செலுத்தும்.

பாஜக ஆட்சி இப்படியே நீடித்தால்இறுதியில் மாடுகள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும், மனிதர்கள் எல்லோரும் செத்துப் போயிருப்பார்கள்!



6 comments:

  1. BJP wants to retain power by cheating the people of India in the name of religion.Already BJP failed in key promises like black money eradication,demonetization,growing unemployment,poverty...

    ReplyDelete
  2. Super sir.. ini oru vaaippu kidaikum podhu, indha thagaval yellorukum sendradayum padiyaga tholaikkatchiyilum solla vendum..!!

    ReplyDelete
  3. ஐயா , நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் நாராயணன் ஆணவத்துடன் பேசினார் நீங்கள் அதற்க்கு தக்க பதில் சொல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. அவர் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரி சவால் விட்டார். அடுத்த முறை அவருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் ஐயா நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே! இங்கு போட்டி நடக்கவில்லை அடுத்தமுறை பதிலடி கொடுக்க... அன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் நன்றாக கவனித்திருந்தீர்களென்றால் திரு திருப்பதி நாராயணன் ஒருவித நடுக்கத்துடனேயே தான் இருந்தார் திரு. கார்திகேயனிடம் நான் பேசும் போது குறுக்கபேசாதிங்க அவர் திரு சுப வீ குறுக்க பேசவே இல்லயேவென்றபோது நான் அவரை சொல்லவில்லை அய்யாவை பத்தி எனக்கு தெரியாதா அவர் அப்படியெல்லாம் பேச மாட்டார் நான் உங்களை தான் சொன்னேன்னு ஒரு குறுக்குசால் ஓட்டுனப்பவே அவர் நடுக்கமோ பதற்றமோ தெளிவாய் தெரிந்தது... கூடிய சீக்கிரமே தெரிந்துவிடும் இந்த பசுக்காவலர்களின் விசத்தன்மை...

      Delete
  4. Dear Subavee Talaivaa,

    I saw the debate and was enormously irritated by the way the BJP person spoke, I initially resisted to comment as I had to take my time to study the act and Go before commenting on the same, the issue is highly technical and needs a detailed study before discussing

    1.) The Directive Principles are not enforceable they act only as broadly based guidelines for the GOI and state governments - strictly speaking thus DPSP has no legal connotation.

    2.) w.r.t TN there is an act 1958 which provides a detailed procedure on the slaughter of animals, it clearly states no milk-producing animal (Cow and Buffalo, goats breed for milk) can be killed for food - the intention is not religious but to prevent milk shortage in the country.

    3.) As per TN act, there is no prevention of cow being killed for food, provided it has stopped producing milk and certified as fit for consumption.

    4.) There is Go issued by TN govt during the emergency (under president rule)but that Go whatever it states cannot violate the parent act(1958) It can only be interpreted within the ambit of parent legislation.

    The BJP narrative is to speak half-truths and lie blatantly based on misinformation most debates they freely digress from the context and talk thing that is of no relevance but cannot be answered immediately the only remedy is to have an intelligent moderator who strictly allows the discussion within the context else we will be at least at the time cannot debate properly

    ReplyDelete
  5. குமரகுரு19 November 2017 at 18:21

    பசுக்கறியோ மாட்டுக்கறியா எதை வேண்டுமென்றாலும் உண்ணுங்கள் ஆனால் பசு மாடோ இல்லை காளை மாடோ இறந்த மறுகணமே 'தோலாட்டி' கத்தி போட்டு தோலுரித்த பின் அவர் உதவியோடு அதே கத்தியால் கறியை பங்கு போட்டு உண்ணுங்களேன்!,யாரும் தடுக்கப்போவதில்லையே உங்களை!!,அதன் பிறகு இந்த பிரச்சனைகளுக்காக விவாதித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமே இருக்காதே!!!.

    ReplyDelete