தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 22 January 2015

சுபவீ கவிதைகள்

சொல் தோழி!

எதுவாக இருக்கும்
என் கடைசிப் பயணம்?
எதுவாக இருக்கும்
என் கடைசி மேடை?
எதுவாக இருக்கும் 
நான்  படிக்கப்போகும் 
கடைசிப் புத்தகம்?
சொல் தோழி 
எதுவாக இருக்கும்
நம் கடைசிச் சந்திப்பு?

கொண்டாடு!

வாழ்க்கை நெடுகத் 
துன்பத்தின் சாயல் படிந்தே கிடக்கிறது!
வாழ்நாள் முழுவதும் 
வலிகள்  நிறைந்தே இருக்கின்றன! 
உறவுகள் சூழ வாழ்ந்தும் 
ஒரு தனிமை உள்ளே நிலைக்கிறது!
வெளிச்சக் காட்டிலும் 
இருளின் அச்சம் இருக்கவே செய்கிறது!
இருந்தாலும் என்ன....
இந்த வாழ்க்கையைப் போல் 
இன்னொன்று உண்டா 
என்றும் நாம் கொண்டாடுவதற்கு?

இதுவும் அதுவும்

இசை மயக்கும் 
தேவைகள்  இயக்கும்
இலக்கியம் இனிமை 
அரசியல் கடமை
காமம் இயற்கை
ஒழுங்குகள் செயற்கை
இயங்குதல் வாழ்க்கை
தேங்குதல் மரணம்! 

17 comments:

 1. எதுகை,மோனைப் பேச்சுக்கள்,கவிதைகள் உங்களிடமிருந்து 15 மாதத்திற்கு முன்பே வெடிக்கிறதே!.1967தான் நியாபகம் வருகிறது.உங்களுக்கு,உங்கள் கட்சிக்கு All the Best,1967ல் நம்பியதைப் போல நம்பும் மக்களுக்கு Prepare for the Worst!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ,

   தாங்கள் சொல்ல வருவதை வெளிப்படையாக சொல்லலாமே !

   தங்கள் கருத்தைப் பார்த்தால் , அரை நூற்றாண்டு ஆட்சியால் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறதே !

   Delete
  2. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நீதிக்குதரணமாக விளங்கும் 'மனுநீதி'சோழன் ஆண்ட நீதிமிக்க பூமியை 1967க்குப் பிறகு காலிகளாளும் பூமி ஆகிவிட்டதே,பொறுக்கி அரசியல் நடக்கும் களமாகிவிட்டதே என்ற ஏக்கம் தான்!

   Delete
  3. 'பூனைக்குட்டி' வெளியே வந்துதானே ஆகவேண்டும் !

   தாங்கள் கூறுவது 'மனுநீதி' சோழன் அல்ல, 'மனு'நீதி சோழன் என்பதை அறிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை!

   எனினும், கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமூக நீதி பேசினால் வரத்தானே செய்யும் !

   Delete
  4. மனுநீதி என்ன அவ்வளவு கேவலமா உங்களுக்கு?.நீங்கெல்லாம் 5000க்கும் 10000க்கும் இன்றுவாங்கும் Doctor பட்டத்தை விட அது உங்கள் பாட்டன்,புட்டனுக்கு வழங்கிய சூத்திரப் பட்டத்தால் உங்கள் பாட்டன்,புட்டன் மட்டுமல்ல அவர்களது வம்சமும்,நீங்களும் தப்பித்தீர்கள், இல்லையென்றால் உங்கள் பாட்டன்,புட்டன் மட்டுமல்ல அவர்களது வம்சமும் அத்தொழிலைச் செய்து நாறியிருப்பார்கள்,ஏன் வீரபாண்டியேரே நாத்தப் பாண்டியாகக் கூட ஆயிருக்கலாம்.அன்று மணந்த சூத்திரப் பட்டம்[அது கிடைக்க வேண்டுமென்று உங்கள் பாட்டன்,புட்டன் அலைந்தார்கள்] இன்று கசக்கிறது.இது காலத்தின் கட்டாயம். அதுமட்டும்லாமல் கல்வி,ஞானம்,தகுதி, திறமை,செல்வாக்குள்வர்கள் சற்சூத்திரப் பட்டம்[Upgraded&Honorary Shudran] பெற்று சமூகத்தில் அந்தஸ்து பெற்று வாழ்ந்தார்கள், மகிழ்ந்தார்கள்.ஏன் இவ்வளவு நம் கலைஞர் அவர்கள் சட்டசபையில்[அரசியல் பொதுக் கூட்டத்தில் அல்ல]நான் அத்தொழிலைச் செய்து வாழ்ந்த வம்சததில் வந்தவன் அல்ல என்பதை தமிழ் சமுதாயத்திற்கு உணர்த்த நான் ஒரு சூத்திரன்,நான் ஒரு சூத்திரன் என்று ஒருமுறைக்கு இருமுறை விளித்தோடு நில்லாமல் சட்டசபைக் குறிப்பில் இடம் பெறத் செய்தார் என்பதை நினைவில் கொண்டால் அந்தப் பட்டம் இழிவில்லை என்பது புலப்படும்.உங்ளுக்குப் புரிய இன்னும் ஒரு உதாரணம் மாவீரன் Nepolian Aluminum கண்டுபிடிக்கப் பட்ட காலத்தில் தனது சாப்பிடும் தட்டு முதல் நாற்காலி வரை அனைத்தயும் Aluminumத்தில் செய்து மகிழ்நதான்[தங்கத்தில் அல்ல],ஆனால் அதற்கு இன்று என்ன மதிப்பு?.யாரும் இன்று Aluminumத்தை கேவலமாப் பேசவில்லையே, அதைப் போல் தான் இதுவும். வேண்டாமென்றால் தூக்கி எறிந்து விடலாம்,அதை விட்டு விட்டு ஏன் மனுநீதியை,பகவத் கீதையை கேவலப்படுத்த வேண்டும்.

   Delete
  5. மனுதர்மத்தை நன்றாக உயா்த்திப் பிடித்து விட்டு, கடைசி வரியில் கீழே தள்ளிவிட்டு, நியாயமாக நடப்பது போன்று தாங்கள் ஏற்படுத்தும் காட்சி தங்களின் உண்மை நிலையை நன்றாகவே பறை சாற்றுகிறது.

   அத்தொழில் , அத்தொழில் என்று எத்தொழிலை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று  'சிலர்' கற்பித்த கருத்தாக்கமே  'கடவுள்' என்றும் , 'விதி' என்றும் மக்களை  மதிஇழக்கச் செய்தது.

   உச்சாணியில் அமர்ந்து கொண்டு மனுவையும், கீதையையும் , வேதத்தையும் தாங்கிப்பிடிப்பவர்கள் எவராகினும் அவர்களுக்கு , தாங்கள் குறிப்பிட்ட 'அத்தொழிலை'  யோ, 'சூத்திரா்' என்னும் பட்டத்தையோ வழங்கி, 'மனு' கூறும் சட்டமனைத்தையும் அவர்களிடம் அமல்படுத்தினால்தான்  'மனு' என்றால் என்ன என்று அவர்களுக்குப் புரியும்.

   மனுவை எப்போதெல்லாம் ஆதரிக்கிறார்களோ ,  அப்போதெல்லாம் அதனை எதிர்ப்பது 'மனிதத்' தன்மையுடைய அனைவரின் கடமையாகும்.

   Delete
  6. 'மனு' என்ன சொல்கிறது என்று தெரியாதவர்களுக்காக :
   ----------------------------------------------------------------------
   அத்தியாயம்-1, சுலோகம்-31
   --------------------------------------------------
   "உலகவிருத்தியின்பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின் றும்பிராமணன் ஷத்ரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கரமமாக வுண்டுபண்ணினார்"

   அத்தியாயம்-2, சுலோகம்-31
   --------------------------------------------------
   "பிராமணனுக்கு மங்களத்தையும் ஷத்ரியனுக்கு பலத்தையும் வைசியனுக்குப் பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது"

   அத்தியாயம்-3, சுலோகம்-242
   -----------------------------------------------------
   "நொண்டி ஒற்றைககண்ணன் கா்த்தாவின் வேலைக்காரனான சூத்திரன் நான்கு விரல் ஆறுவிரலுள்ளவன் இவர்களை சிரார்த்ததிநத்தில் அந்த வீ்ட்டை விட்டு வெளிப்படுத்தவேண்டியது."

   அத்தியாயம்-4, சுலோகம்-80:
   --------------------------------------------------
   "சூத்திரனுக்கு இம்மைக் குபயோகமான அர்த்தசாஸ்த்திரத்தை சொல்லிவைக்க லாகாது, தனக்குச்சஷியனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அந்நத்தைக் கொடுக்கக்கூடாது. ஓமம்பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது."

   அத்தியாயம்-5, சுலோகம்-104:
   -----------------------------------------------------
   "பிராமணன் முதலானோர் இறந்தால் அந்தச் சாதியார் இருக்கும்போது சூத்திரனைக்கொண்டு அப்பிணத்தை எடுக்கச் சொல்லக்கூடாது அப்படி யெடுத்து தகநஞ் செய்தால் இறந்தவனுக்கு புண்ணியலோகம் வரமாட்டாது"

   அத்தியாயம்-6, சுலோகம்-88
   ---------------------------------------------------
   "நான்காச்சிரமங்களுக்குள்ளே வேதம் தர்மசாஸ்திரம் இவைகளிற் சொல்லுகிற கர்மாநுஷ்டாநஞ் செய்கிற கிரகஸ்தன் மற்ற மூவரையும் பிஷை கொடுத்துக் காப்பாற்றுகிறபடியால் அவன் உயா்ந்தவனென்று சொல்லப்படுகிறான்"

   அத்தியாயம்-7, சுலோகம்-140:
   -----------------------------------------------------
   இராஜதர்மம் : "அரசன் தண்டனை செய்யாவிடில் உலகத்தார் ஜாதி மரியாதையையும் சாஸ்திர மரியாதையையும் கடந்து நடப்பார்கள்"

   அத்தியாயம்-8, சுலோகம்-413:
   -----------------------------------------------------
   "பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம், ஏனெனில் அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறனவல்லவா.

   அத்தியாயம்-9, சுலோகம்-30:
   -----------------------------------------------------
   "கணவன்சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப்பிணியால் வருந்துவாள்"

   அத்தியாயம்-9, சுலோகம்-319:
   -----------------------------------------------------
   "பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்திருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கர்கள் ஏனெனில் அவர்கள் மேலான தெய்வமல்லவா."

   அத்தியாயம்-10, சுலோகம்-122:
   --------------------------------------------------------
   "சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும்"

   அத்தியாயம்-10, சுலோகம்-129:
   -----------------------------------------------------
   "சூத்திரன் பொருள் சம்பாதக்கத்தக்கவனாக இருந்தாலும் குடும்பத்திற்கு உபயோகமானதை விட மிகவும் அதிக பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்"

   அத்தியாயம்-11, சுலோகம்-206:
   -------------------------------------------------------
   "பிராமணனை கொல்லவேணும் என நினைத்து தடி முதலிய ஆயுதத்தை ஒங்கினால் நூறு வருடமும், அதனாலடித்தால் ஆயிரம் வருடமும் நரகத்தில் வாஸஞ்செய்வான்"

   அத்தியாயம்-12, சுலோகம்-59:
   -----------------------------------------------------
   "பிராமண ஹிம்சை செய்பவர்கள் பூனையாகப் பிறப்பார்கள்."

   ----------------------------------------------------------------

   இது அத்தியாயத்திற்கு ஒன்று இரண்டாக "சாம்பிள்" தான்.

   இப்படி 12 அத்தியாயங்களிலும் நஞ்சை விதைத்திருப்பதுதான் மனுதர்மம்.

   இப்படிப்பட்ட மனுநீதியைத்தான் நண்பா் "அனானிமஸ்" அவர்கள் , "அவ்வளவு கேவலாமா உங்களுக்கு" என்று நம்மைப்பார்த்துக் கேட்கிறார்.

   இப்பொழுது சொல்லுங்கள். இது மனு தர்மமா அல்லது மனு 'அ'தர்மமா என்று.

   Delete
  7. விவேகானந்தன்5 February 2015 at 15:48

   அது இன்று கேவலமாதாகாகிவி்ட்டது, உ்ண்மைதான்.அதுமட்டுமல்ல அறிவியல், பொருளாதாரம்,வியாபாரம்,வாழ்க்கை,அரசு எல்லாமே இந்த 2000 வருடங்களில் தலைகீழாகிவிட்டதே!அதுபோலதான் இதுவும்.ஆனால் அன்று அப்பட்டங்கள் கிடைக்காத(4)வர்ணக் கோபுரத்தின் வெளியே இருந்த மக்களால் அந்த சூத்திரப் பட்டம் பத்மபூஷணக்கும்,சற்சூத்திரப் பட்டம் பாரத் ரத்னாக்கும் இணையாகக் கருதப்பட்டதே! அதற்கென்ன சொல்லப்போகிறீர்கள்?.ஆகவே அன்று அது மனு தர்மம் இன்று அது மனு அதர்மம்.இந்த 2000 வருடங்களில் அதுவும் தலைகீழாகிவிட்டது! அவ்ளவே!

   Delete
  8. விஷ்ணு6 February 2015 at 19:23

   அய்யா மநுநீதி ஆட்சிசெய்த காலம்தான் அதாவது குப்தர்களின் காலம் பாரதத்தின் பொற்காலமாகும்..அது போல தமிழகத்தில் நீங்களெல்லாம் புகழும் ராஜராஜ,ராஜேந்திர, ராஜதிராஜ,பராந்தக,குலலோத்துங்க சோழர்கள் ஆட்சிசெய்த சோழர்கள் காலம்தான் தமிழகத்தின் பொற்காலமாகும்.சோழர்களுக்கு முன்பு களப்பிரப் பாவிகளை அழித்தொழிக்க உதவிய பல்லவர்கள் மற்றும் சோழர்களுக்குப் பின் வந்த நாயக்கர்கள் ஆட்சிகளை முறையே தமிழகத்தின் வெள்ளி காலம்&ப்ளாட்டினம் காலம் என்றே கூற வேண்டும்.மநுநீதி ஆட்சிசெய்த இந்தக் காலங்களில் தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக,செல்வச் செழிப்போடு இருந்தது.உலகத்தின் பிற பகுதிகளில் அந்த காலகட்டங்களில் புரட்சிகள் பல வெடித்த போதும் இங்கு மநுநீதி ஆட்சிசெய்தால்,மநுதர்மப்படி அவரவருக்குரிய தர்மத்தை மீற முடியாததால் பாரதமும், தமிழகமும் புரட்சிகளில்லாத பூமியாக, அமைதிப் பூங்காவாக விளங்கியது. ஏனென்றால் இங்கு ஆயுதங்களைத் தொட,போர்புரியச் சத்திரியனைத் தவிர யாருக்கும் உரிமையோ,தைரியமோ இல்லை.இன்றுள்ள நீதிகளால் எவ்வளவு கூச்சல்கள், குழப்பங்கள்,போராட்டங்கள், கலவரங்கள் அப்பப்பா இன்று பாரதமும்,தமிழகமும் கலவர பூமியாகும் போல் உள்ளதே.மநுநீதி ஆட்சிசெய்தால் இவற்றுக்கெல்லாம் வேலையில்லையே! இவையனைத்தையும் அடக்கி ஒடுக்கி விடுமே! மீண்டும் பாரதமும்,தமிழகமும் அமைதிப் பூங்காவாகுமே.

   Delete
  9. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 00:45

   மனு கேவலமானது என ஒப்புக்கொண்டமைக்கு முதலில் என் நன்றி !!!

   பொருளாதாரம்,வியாபாரம்,வாழ்க்கை,அரசு எல்லாமே இந்த 2000 வருடங்களில் மாறிவிட்டது உண்மைதான். ஆனால் இவைகள் மனிதனின் அறிவு வளர்ச்சியாலும் அதனால் விளைந்த அறிவியல் வளர்ச்சியாலும் ஏற்பட்ட மாற்றங்கள்.

   மனு தர்மம், மனு அதர்மமாக மாறியது இயற்கையாக நிகழ்ந்த நிகழ்வல்ல. 19 நூற்றாண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்ததை, தந்தை பெரியார், அம்பேத்கா் போன்ற சமூக போராளிகளின் போராட்டம்தான் கடந்த நூற்றாண்டில் மாற்றியது !!!

   மனுவையும், கீதையையும், வேதத்தையும் காப்பற்றத்தான் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.

   மக்கள் கல்வி பெற்றனர், மனு தர்மம் மனு அதர்மமானது என்பதுதான் உண்மை !!!

   Delete
  10. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 22:47

   விஷ்ணு :

   குப்தா்கள் காலம் பொற்காலம் என்பது உண்மைதான். ஆனால் யாருக்கு?

   மூன்று சதவீதமாக இருந்து கொண்டு, மற்ற அனைவரையும் சாதியின் பெயரால் ஆதிக்கம் செய்தவர்களுக்குத்தான் அது பொற்காலம்.

   சோழ, பல்லவ மற்றும் நாயக்க மன்னர்களை தாங்கள் உயர்த்திப் பிடிப்பது ஏன் என்பதை கண்டுபிடிக்க ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. அதே மூன்று சதவீத ஆதிக்கவாதிகளுக்கு வால் பிடித்து 'கோவில்களை' மடடுமே கட்டித் தீர்த்தவர்கள்தான் அவர்கள்.

   "உலகெலாம் புரட்சி, இங்கு அமைதி, அதற்கு காரணம் மனுவாம். என்னே ஒரு அமைதி! அது ஆண்டானுக்கும் அடிமைக்குமுண்டான அமைதி! அது உடைக்கப்பட வேண்டியது, அதைத்தான் செய்தார் தந்தை பெரியார் என்னும் சமூக போராளி!

   தாங்கள் குறிப்பிட்ட அந்த 2000 வருட அமைதிதான், உலகிலேயே எங்குமில்லாத, கேவலமான , மனிதத் தன்மையற்ற சாதியக் கருத்தாக்கத்தை இந்தியாவில் நிலைநிறுத்தியது.

   தாங்கள் குறிப்பிட்ட 'புரட்சி' நாடுகள் எல்லாம் அறிவியல் வளர்ச்சியில் எங்கோ சென்றுவிட , நாம் இன்னும் மனிதனை மனிதனாக நடக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

   இது நடந்து விடக் கூடாது என்பதில்தான் நண்பர் விஷ்ணுவுக்கு எவ்வளவு ஆசை, அதை நிராசையாக்குவதில்தான் இந்தியாவின் வளர்ச்சியே இருக்கிறது !!!

   Delete
  11. விஷ்ணு10 February 2015 at 00:57

   'புரட்சி' நாடுகள் எல்லாம் அறிவியல் வளர்ச்சியில் எங்கோ சென்றுவிடவில்லை உ.ம்.பல ஆப்பிரிக்க நாடுகள்,ஏமன்,சிரியா,etc., மக்கள் மிகக் கேவலமாக மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இதற்கெல்லாம் காரணம் அங்கு மநுநீதி ஆட்சி செய்யாததுதான்!.பாரதமும்,தமிழகமும் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமா அல்லது காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.2000 வருடங்களாகியும் மநுநீதி இன்றும் பேசப்படுகிறது என்றால் நீங்களே புரிந்து கொள்ளலாம் அன்று கொடுத்த மருந்து [அரசியலமைப்பு சட்டத்தில் அங்கமில்லாத போதிலும்]இன்றும் வீரியத்தோடு வேலை செய்கிறதென்று!.சோழ மஹாராஜா காலத்தில் 'மநுநீதி'யைப் பற்றி நீங்கள் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் உங்களை கழுமரத்தில் மல்லாத்திருப்பார்கள்!

   Delete
  12. கணேஷ்வேல் மணிகாந்தி10 February 2015 at 23:33

   தாங்கள் குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் மனிதனை மதத்தாலும், நிறத்தாலும் பிரித்த பலனை அனுபவிக்கிறார்கள். தங்களுக்கு 'புரட்சியால்' முன்னேற்றமடைந்த நாடுகள் எதுவுமே தெரியாதென்று நினைக்கிறேன்.

   மன்னராட்சியில், மன்னர்களை மயக்கி மநுவைக் கொடுத்த அதே தந்திரத்தை தற்போது மக்களாட்சியிலும் திணிக்கப்பார்க்கும் பார்ப்பனியம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
   அதன் வெளிப்பாடுதான் 'கீதை' புனிதநூல், சமஸ்கிருத வாரம் என்பதெல்லாம்.

   பார்ப்பனியம் உள்ள வரை, மநு இருக்கும் என்பதை அறிவோம் , ஆனால் இதை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம்!

   மக்கள் மதிபெற்றால் , மநு என்ன மன்னர்களையே நாங்கள் கழுவேற்றுவோம் !

   மநுநீதியை சாய்ப்போம், சமூகநீதியைக் காப்போம் !

   Delete
 2. /* இந்த வாழ்க்கையைப் போல்
  இன்னொன்று உண்டா
  என்றும் நாம் கொண்டாடுவதற்கு? */

  மிக அருமை அய்யா !

  ReplyDelete
 3. ///இருந்தாலும் என்ன....
  இந்த வாழ்க்கையைப் போல்
  இன்னொன்று உண்டா
  என்றும் நாம் கொண்டாடுவதற்கு?///
  கொண்டாடித்தான் பார்ப்போமோ
  உபயோகமாய் வாழ்ந்துதான் பார்ப்போமே
  நன்றி ஐயா

  ReplyDelete
 4. தோழி, இதுவும் அதுவும் கொண்டாடு என்று சொல்கிறார். அருமை.

  ReplyDelete