தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 15 December 2015

அடக்கப்பட வேண்டிய அநாகரிகம்


பாட்டில் அநாகரிகம் இருந்தது. பேட்டியில் அராஜகம் இருந்தது.- இப்படித்தான் சொல்லவேண்டியுள்ளது, சிம்பு, அனிருத் உருவாக்கியுள்ள பீப் பாடல் குறித்து!

அண்மையில் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஒரு பாடல், மிகக் கண்ணியக் குறைவான சொல்லோடு தொடங்குகிறது. திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அப்பாடலை உருவாக்கியுள்ளனர். எனினும், தாங்கள் அதனை வெளியிடவில்லை என்றும், அது தானாகக் கசிந்து வெளிவந்துள்ளது என்றும் கூறுகின்றனர். எப்படியோ, அது தங்களின் பாடல் இல்லை என்று அவர்கள் கூறவில்லை.


நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல், இப்படி ஒரு பாடலை வடிவமைக்கும் வேலையில் அவர்கள் இருந்துள்ளனர் என்பதே வெட்கத்திற்கும், வேதனைக்கும் உரியது. நடிகர்கள் பலர் நிதி அளித்தும், நிவாரணம் அளித்தும், தெருக்களைக் சுத்தம் செய்தும் தங்கள் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில், சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் வேலையை மட்டுமாவது இவர்கள் செய்யாமல் இருந்திருக்கலாம்.

காமம் வாழ்வின் ஒரு பகுதிதானே என்கின்றனர். ஆம், காதலும், காமமும் வாழ்வின் பிரிக்கப்பட முடியாத பகுதிகள்தாம். ஆனாலும், அறைக்குள் எது, அம்பலத்தில் எது என்ற வரையறை இல்லாத வாழ்வு அநாகரிகமானது. சிறுநீர் கழிப்பது ஆபாசமானதோ, யாரும் அறியாததோ இல்லை. என்றாலும் சாலையின் நடுவில் நின்று எவரும் சிறுநீர் கழிப்பதில்லை. ஒதுக்குப்புறம் நோக்கிச் செல்வது அடிப்படை நாகரிகம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, சிம்பு அளித்துள்ள பேட்டி ஆணவத்தின் உச்சமாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேளுங்கள், இல்லாதவர்கள் கேட்க வேண்டியதில்லை என்று சொல்வது அடக்கப்பட வேண்டிய அராஜகம் என்றுதான் சொல்ல வேண்டும். .


10 comments:

  1. ஒரு நீண்ட நாள் வியாதி படிப்படியாக முற்றி இந்த அளவு கீழ் இறங்கி உள்ளது, பணத்திமிரில் உலாவி அடாவடிதனத்தையே ஒரு கதாநாயக பாவம் என்று கலை வேஷத்தில் உலா வரும் சமுக விரோதிகள் இவர்கள். திரையில் வன்முறை கேவலமான ஆபாசம் எல்லாம் பெரிய பெரிய நடிகர்களே தங்கள் படங்களில் காண்பித்து காசு பார்க்கிரார்கள். இவர்களை போன்றவர்களால் பெண்கள் தெருவில் இறங்கவே பயபடுகிறார்கள். ஒவ்வொரு பெண்பிள்ளைகளை பெற்ற தந்தையும் தாயும் படும் வேதனை சொல்லி மாளாது. சமுகத்தை நாசமாக்கி இவர்கள் மட்டும் சுகமாக ஊரை ஏமாற்றி வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஏமாற போகிறார்கள். தன்வினை தன்னை சுடும் . சிம்பு அனிருத் போன்றோர்களின் பெற்றோர்களுக்கு இதில் மிகப்பெரும் பங்கு உண்டு. காசை வீசி எறிந்து தறுதலைகளாக பிள்ளைகளை வளர்த்த டி ராசேந்தர் போன்றவர்களும் பதில் சொல்ல கடமை பட்டவர்களே. எங்கே அவர்களின் அடுக்கு மொழி பதில்கள்? மக்கள் உன்னிப்பாக எதிர்ப்பார்க்கிறார்கள். நேர்மையாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பிள்ளைகளை ஒரு நல்ல உளவியல் நிபுணரிடம் அனுப்பலாமே?

    ReplyDelete
  2. ஒடுக்கப்பட வேண்டியவர் சிம்பு

    ReplyDelete
  3. வக்கிரத்தின் உக்கிரம்!
    தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடித்தால் கூட அது குறைந்தபட்சத் தண்டனை தான்!

    ReplyDelete
  4. 'உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை' என்று பாடியவனெல்லாம் தமிழ் நாட்டு முதல்வர் ஆனதாக வரலாறு உண்டு...

    ReplyDelete
  5. உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாறிவிட கூடாது என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கிறது..
    Melum இருவரது பதிலும் சட்ட்று கூட வருத்தம் இன்றி ஆணவ தொனியில் இருப்பது மேலும் எரிச்சல் அடைய செய்கிறது

    ReplyDelete
  6. ஆத்திரத்தில் எழுதும் கருத்துக்கள் அறிவுள்ளதாக இருக்காது என்பதற்கு சுபிவீயின் இந்தக் கட்டுரையே சாட்சி! சிம்பு செய்தது கண்டிக்கபடவேண்டுமே அன்றி தண்டிக்கப்பட வேடியதல்ல! மற்றவர்களை தூண்டிவிடும் செயல் அறிவுடையோர் செய்வதல்ல!

    ReplyDelete
  7. ஏற்கனவே சினிமாவில் வரும் காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் நாரி நாத்தம் எடுத்துப்போயிதான் உள்ளது! இது இன்னும் ஒரு படி மேலே போய் உள்ளது! பரணாம வளர்ச்சி அவ்வளவுதான்! இந்த லட்சணத்தில் என்னமோ எல்லோரும் எல்லோரும் பக்திப்படம் மட்டுமே எடுப்பது போலவும் சிம்புதான் அதை கெடுத்தது போலவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வியப்பாக உள்ளது!

    ReplyDelete
  8. முக நூல் பதிவில் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் குறிப்பிட்ட மாதிரி இது ஒரு திட்டமிட்ட செயல். வெள்ளப் பாதிப்பில் மக்கள் ஆட்சிக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கும் போது அதனை திசை திருப்ப வேண்டி செய்த செயல் என்பது உண்மையே..
    வே. பாண்டி / தூத்துக்குடி

    ReplyDelete
  9. ஒடுக்கபடவேண்டியசெயல்,நல்ல பதிவு

    ReplyDelete
  10. உண்மை தான் சுபவீ அய்யா ... தவறான முன் உதாரணமாக மாறிவிட கூடாது என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கிறது..

    ReplyDelete