பயணிகளைப் போல் கலைய நேர்ந்தது
ஒவ்வொரு காசாய்ச் சேர்த்துச் சேர்த்து
ஒட்டுமொத்தமாய்ச் செலவிட நேர்ந்தது
கடலின் அலையாய் ஆடித் திரிந்து
நுரையின் வாழ்வாய் உடைய நேர்ந்தது
பாட்டும் இசையுமாய்க் கலந்து கிடந்து
பாலையும் மழையுமாய்ப்
பிரிய நேர்ந்தது
சுகமே வலியாய் மாறிப் போனது
வலியே சுகமாய் நிலைத்தும்
நின்றது!
அருமை. இயல்பாய் ஓடி வரும் நதியாய் வந்து விழும் வார்த்தைகளால் அமைந்த கவிதை.கருவும் அருமை. வா. நேரு, மதுரை.
ReplyDelete:-)
ReplyDelete